ரூ. 120 கோடி சம்பளம்.. பிரமாண்டமாக உருவாகவிருக்கும் தளபதி 66 படத்தின் பட்ஜெட் இதுதானா..

ளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் என்பதை நாம் அறிவோம்.

இப்படமே இன்னும் முடிவுக்கு வாராத நிலையில், தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 66 படம் குறித்து தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டது.

இப்படத்திற்காக நடிகர் விஜய் சுமார் ரூ. 120 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் கூட பேச்சு அடிப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் பிரபலமான, இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தளபதி 66 படத்தின் முழு பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ.180 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!