தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் எப்போது.. வெளியான சூப்பர் தகவல்

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன், மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது.

அங்கே இப்படத்தின் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் அணைத்து பணிகளையும் முடித்து, வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், வரும் 2022 பொங்கல், தளபதி விஜய் ரசிகர்கள், தளபதி பொங்கலாக அமையும் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!