விஜய்யின் பீஸ்ட் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போது?

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பீஸ்ட். படத்தின் படப்பிடிப்பு முதற்கட்ட லாக் டவுன் பின்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் போட்டு நடத்தப்பட்டது. பூஜா ஹெட்ச் நாயகியாக நடிக்கிறார், அனிருத் இசையமைக்கிறார்.

பூஜா ஹெட்ச் அண்மையில் பீஸ்ட் படத்திற்காக விஜய்யுடன் ஒரு பாடல் படப்பிடிப்பு நடந்து முடிந்தது என்று கூறியிருந்தார்.

தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கட்கிழமை தொடங்குகிறதாம், இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் படக்குழு ரஷ்யா செல்கிறார்களாம்.

அங்கு படத்தில் இடம்பெறும் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!