இந்திய பிரபலங்களில் சல்மான் நம்பர் 1..!! அப்படினா நம்ம தல தளபதி நிலைமை..!!!


இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை ஆண்டு தோறும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. துறைசார்ந்த பங்களிப்பு, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதல் இடம் பிடித்துள்ளார். ஷாருக்கான் 2வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்திலும், நடிகர் அக்ஷ்ய்குமார் 4வது இடத்திலும் உள்ளனர்.

சச்சின் டெண்டுகல்கருக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்து தீபிகா இந்த ஆண்டு 11வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. 8வது இடம் அமீர்கானுக்கு. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 20வது இடத்தை பிடித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சல்மான்கான் ஆண்டு வருமானம் 232 கோடி. ஷாருக்கான் வருமானம் 170 கோடி, விராட் கோலிக்கு 100 கோடியும், அக்ஷ்ய்குமாருக்கு 98 கோடியும், டெண்டுல்கருக்கு 82 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது.


இந்த பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இடம்பிடித்துள்ளனர். அதில், தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிப்பவராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.

இவர் 12வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் ரூ.57.6 கோடி. இவருக்கு அடுத்தப்படியா சூர்யா 25வது இடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 34 கோடி.

அஜித் 31.75 கோடி வருமானத்துடன் 27-வது இடத்திலும், விஜய் 29 கோடி வருமானத்துடன் 31-வது இடத்திலும் உள்ளனர். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி 55 கோடி வருமானத்துடன் 15வது இடத்திலும், நடிகர் பிரபாஸ் 36 கோடியுடன் 22வது இடத்திலும் இருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!