வாழ் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு மட்டுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதற்கு முக்கிய கார்னம் அந்த படத்தின் இயக்குனர்களாக இருப்பார்கள், அப்படி அருவி என்ற சூப்பர் சென்சேஷ்னல் படத்தை கொடுத்த அருண் பிரபுவின் அடுத்தப்படமான வாழ் இன்று OTTயில் வந்துள்ளது, படம் எப்படி பார்ப்போம்..

கதைக்களம்
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஒரு விஷயம் பலருக்கும் இங்கு கேள்விக்குறி தான் ஏனெனில் நாளை விடிந்தால் காலை ஆபிஸ் ஓட வேண்டும் என்ற மனநிலை இன்றே வந்துவிடும்.

அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் கதை…

படத்தை பற்றிய அலசல்
Hollywood மற்றும் மற்ற உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது, ஹாலிவுட் இயக்குனர் சீன்பென் இயக்கிய இன் டூ தி வொய்ல்ட் படத்தை எல்லாம் நம்மில் பல பேர் பார்த்திருப்போம்.

அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையாக நடித்துள்ளார்.

அதிலும் ஹீரோயினுடன் இவர் நெருங்கும் காட்சி எல்லாம் அத்தனை அழகாக இரண்டு பேரும் நடித்து அசத்தியுள்ளனர். படத்தின் மிகப்பெரிய பலமாக பார்ப்பது இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் தான், இசை ப்ரதீப் குமார், பின்னணியில் நம்ம மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.

இதையெல்லாம் விட ஒளிப்பதிவு, நாமே ஹீரோவுடன் பயணிக்கும் அனுபவம், இத்தனை ப்ளஸ் இருந்தும் படத்தில் குறையாக தெரிவது இரண்டாம் பாதி திரைக்கதை தான்.

ஏதோ படத்தோடு ஒன்றி பார்க்க முடியாமல் இருக்கிறது, இரண்டாம் பாதி மிகப்பெரிய விஷ்வல் ட்ரீட்டாக இருந்தாலும், பெரிதாக அழுத்தமான காட்சிகள் இல்லாதது சுவாரஸ்யத்தை குறைக்கிறது.

க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம்
படத்தின் வசனங்கள், டெக்னிக்கல் டீம், இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே..

பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவு

மொத்தத்தில் வாழ் ஹீரோவுடன் நாமும் பயணித்து ஒரு முறை பார்க்கலாம்.

2.75

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/3kANL8D9alw” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!