அம்மாடியோவ்.. 2017ல் இவ்வளவு சர்ச்சைகளா..? பாருங்க அசந்துருவீங்க..!!


2017ம் ஆண்டு திரையுலகினருக்கு சர்ச்சைகள் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.

2017ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு திரையுலகம் சந்தித்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். ஜனவரி மாதம் துவங்கியபோதே சர்ச்சையும் கிளம்பிவிட்டது.

ஜனவரி மாதம் சிக்கியது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தான்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர்கள் புரட்சி செய்தபோது விஷால் பிரச்சனையில் சிக்கினார். விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார் என்று சர்ச்சை கிளம்பியது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்ற விஷாலின் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை. இதையடுத்து அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட ஆர்யாவையும் நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்தார்கள். பீட்டா ஆதரவாளரான த்ரிஷாவுக்கும் டோஸ் விழுந்தது.


நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் ஆட்கள் தாக்கியதால் காயம் அடைந்த பாடகி சுசித்ரா தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்களையும் வெளியிட்டார்.

தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை வெளியிடுவதாக சுசித்ரா கூறினார். பின்னர் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி பின் வாங்கிவிட்டார். அவருக்கு மனதளவில் பிரச்சனை இருப்பதாக அவரின் கணவர் தெரிவித்தார். இதற்கிடையே சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஆளாளுக்கு ட்விட்டரில் கணக்கு துவங்கி பிரபலங்களின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் இருந்ததால் பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து படத்தை ஹிட்டாக்கிவிட்டார்கள். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளரை வலியுறுத்தவும் செய்தார்கள்.


பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திக்காரர்கள் நடத்தலாம் ஆனால் இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். நிகழ்ச்சியை நடத்திய கமல் ஹாஸனையும் விமர்சித்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் கூட பின்னர் விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். விஜய் டிவியும் பிக் பாஸை வைத்து டிஆர்பியை ஏற்றியது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு தான் ஜாக்பாட் அடித்தது. அந்த அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள்.

லட்சுமி ப்ரியா நடித்த லட்சுமி குறும்படம் ஏகத்திற்கும் பிரபலமாகி சர்ச்சையில் சிக்கியது. ஆண் தவறு செய்கிறான் என்றால் பதிலுக்கு பெண்ணும் அதையே செய்ய வேண்டுமா என்ற விவாதம் எழுந்தது. லட்சுமி ப்ரியா நடித்துள்ளார் என்பதை மறந்து அவர் நிஜமாகவே செய்தது போன்று பலர் திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்ஸ்


தமிழக பெண்கள் அழகா, கேரள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சியை நடத்த ப்ரொமோ வீடியோ வெளியிட்டனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

நகைச்சுவை நடிகர்களான ஆர்.ஜே. பாலாஜியும், சதீஷும் ட்விட்டரில் மோதிக் கொண்டனர். ஆர்.ஜே. பாலாஜி ஆரம்பித்து வைக்க சதீஷ் கொந்தளிக்க பின்னர் அவர்களாகவே அடங்கி போயினர். எனக்கு பிடித்த காமெடியன் சதீஷ். ப்ளீஸ் நம்புங்க என்று பாலாஜி ட்வீட்டியதால் சண்டை ஆரம்பித்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!