‘தி கிரே மேன்’ படத்தின் இரண்டாம் பாகம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்திருந்தார். இப்படம் 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி இருந்தது.


இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே “ரயன் காஸ்லிங் கதாபாத்திரத்திற்கு பிறகு தனுஷின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் விரைவில் அவரது கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம்” என்று படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் ரூசோ பிரதர்ஸ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் ‘தி கிரே மேன்’ படத்தின் சீக்குவல் அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறோம், இதனை ரியான் கோஸ்லிங், நாங்கள் மற்றும் இணை எழுத்தாளர் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரோடு பணியாற்றிவருகிறோம்” என தெரிவித்துள்ளனர். அதோடு படத்திற்கான ஸ்பின் ஆஃப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும், இதனை பிரபல எழுத்தாளர்கள் பால் வெர்னிக் மற்றும் ரெட் ரீஸ் எழுதுவதாகவும் ரூசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!