இயக்குனர் சங்கர் படங்களை இயக்க தடையில்லை – வெளியான அதிரடி உத்தரவு

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படங்களையும் சங்கர் இயக்க கூடாது என்று, தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார்.

இதனை எதிர்த்து லைகா நிறுவனம் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

இதன் விசாரணையின் போது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல எனக்கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து விட்டததாக தெரிவித்துள்ளனர்..

இதன்முலம் இயக்குனர் சங்கர் படங்களை இயக்க தடையில்லை என்று தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!