நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றி சொன்ன அன்புடன் குஷி சீரியல் நடிகை, எதற்காக தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் அன்புடன் குஷி.

இந்த சீரியலில் நடித்து வந்த மன்சி ஜோஷி பதிலாக மாற்றப்பட்ட நடிகை ரேஷ்மா வெங்கடேஷ், இவர் இந்த ஒரு சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.

மேலும் இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன் பிரபல ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ரேஷ்மா பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரை இந்த தலைமுறைக்கு கொண்டுவந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நன்றியும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!