பிரமாண்ட படத்தில் காஜல் அகர்வாலுக்கு வரும் வாய்ப்பு – ஓகே சொல்லவரா காஜல்

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன், பாலிவுட் நடிகை வாணி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சலார் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஒரே ஒரு பாடலுக்கு நடமாட அவருக்கு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகையாக வளம் வரும் காஜல் அகர்வால் தற்போது ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!