சிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜா விலகல் ?

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின், தெலுங்கு ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து இயக்க மோகன்ராஜா ஒப்பந்தமானார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ள இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்படத்தை இயக்க பிரபல இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தமானார். அவரிடம் இப்படத்தின் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியுள்ளார் சிரஞ்சீவி. மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என்று மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி. இதனால் மோகன்ராஜா இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!