விவேகம் வில்லன் மற்றும் கத்தி வில்லன் இணையும் மெஹா ஹிட் திரைப்படம்..!!


ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென்றால் கதைக்கு பிறகு வில்லன் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது. வில்லன் சரியில்லாமல் இருந்து, ஹீரோ எவ்வளவு சாகசம் செய்தாலும், பெரிய ஹீரோவாக இருந்தாலும் படத்திற்கு பால் ஊத்திவிடுவார்கள் ரசிகர்கள்.

அந்த அளவுக்கு வில்லன் காதபாத்திரம் மிக முக்கியமானது. வில்லன் மீது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும். அப்போது தான் ஹீரோ ஹீரோயிசம் செய்வது எடுபடும். அந்த வகையில், விவேகம் படத்தின் வில்லன் விவேக் ஒபராய் மற்றும் கத்தி படத்தின் வில்லன் நீல் நிதின் முகேஷ் ஆகிய இருவரும் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சாஹோ படத்தில் நடிக்க ஒப்பந்தாகியுள்ளனர்.

இவர்களுடன் ஸ்ரத்தா கபூர், மந்திரா பேடி, ஜாக்கி ஷரிப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!