முன்னணி நடிகர்களின் மும்முனை மோதல்..!! சரவெடி யார்..? புஸ்வானம் யார்..?


நடிகர் அஜித்குமார் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ள விஸ்வாசம் படத்தின் அறிவிப்பு வெளியானது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று தயாரிப்பாளர் T.தியாகராஜன் உறுதியாக கூறிவிட்டார்.

மேலும், நடிகர் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகவுள்ள “சூர்யா36” படத்தின் அறிவிப்பு சற்று முன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதன் படி நடிகை சாய்பல்லவி இந்த படத்தில் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்று படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி விஜய் – முருகதாஸ் கூட்டணியில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள படமும் ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் மூலம், 2018 தீபாவளி ரேஸ் பொறி பறக்கிறது. மூன்று பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாவது சரியாக இருக்காது. அனைத்து படங்களுக்கும் வசூலில் சரியான அடி விழும்.

பொறுத்திருந்து பார்ப்போம்..! தீபாவளிக்கு சரவெடி யார்..? புஸ்வானம் யார்..? என்று..!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!