இளயதளபதி தவற விட்ட மெகா ஹிட் படங்கள்..! என்ன தெரியுமா?


தமிழ் சினிமாவின் தற்போதைய இருதுருவங்கள் என்றால் அது தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவருமே தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்கள்.


லட்சகணக்கான ரசிகர்களை கொண்டவர்கள். இதில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் பட்டையை கிளப்பி பிளாக் பஸ்டராக உள்ளது.


இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய் சில சிறந்த படங்களை தவற விட்டிருக்கிறார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.


ஷங்கர் முதல்வன் படத்தின் கதையை முதலில் ரஜினிக்கு சொல்லி இருக்கிறார், அவர் முடியாது என கூறவே விஜயை நடிக்க வைக்க ஷங்கர் முயற்சித்தார்.


இறுதியில் அர்ஜூன் நடிப்பில் படம் வெளியானது. அதே போல அஜித்துக்கு முன்பு தீனா படத்தை விஜய் வைத்து எடுக்க நினைத்தார் முருகதாஸ்.

அதன்பிறகு தல நடிப்பில் தீனா வெளியானது. இதே சிங்கம், உன்னை நினைத்து, ஆட்டோகிராப், தூள், சண்டைக்கோழி போன்றவை விஜய் தவற விட்ட மெகா ஹிட் படங்களாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!