லெகசி ஆப் லைஸ் – விமர்சனம்

நடிகர் ஸ்காட் ஆடிகின்ஸ்
நடிகை அன்னா புட்கேவிச்
இயக்குனர் அட்ரியன் பால்
இசை ஆர்காடியஸ் ரெய்கோவ்ஸ்கி
ஓளிப்பதிவு சைமன் ரவுலிங்
படம் ஆரம்பத்தில் 12 வருடங்களுக்கு முன்பு நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் (எம்.ஐ.6) சீக்ரெட் ஏஜெண்ட்டாக இருக்கிறார். ஆனால் பொது வெளியில் ரிப்போர்டராக இருக்கிறார். ஒரு முக்கியமான ஆவணம் கைமாற்றத்தின் போது, ஸ்காட் அட்கின்ஸின் மனைவி இறக்கப்படுகிறார்.

தற்போது நிஜ வாழ்க்கையில், ஸ்காட் அட்கின்ஸ் பாரில் வேலை பார்த்துக் கொண்டு தனது மகளை வளர்த்து வருகிறார். ஒருநாள் யூலியா சோபோல் என்ற பெண், ஸ்காட்டிடம் ஒரு முக்கியமான ஆவணம் எடுத்து வரசொல்லி கேட்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஸ்காட்டை, ஒரு மர்ம கும்பல் தாக்குகிறது. மேலும் ஸ்காட்டின் மகளை பணய கைதியாக வைத்து முக்கிய ஆவணத்தை கேட்கிறார்கள்.

இறுதியில் ஸ்காட் அட்கின்ஸ், முக்கிய ஆவணத்தை கைப்பற்றி தன் மகளை மீட்டாரா? இல்லையா? முக்கிய ஆவணத்தில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லை. சில காட்சிகள் மட்டும் ரசிக்கும் அளவிற்கு உள்ளது. மகளாக நடித்திருப்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அளவிற்கு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவில் கைக்கொடுக்க வில்லை.

ஸ்பைக் திரில்லர் படத்தை ஹாரர், ஆக்‌ஷன் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்ரியன் பால். முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் மெதுவாக நகர்கிறது. ஆர்காடியஸ் ரெய்கோவ்ஸ்கியின் பின்னணி இசையும், சைமன் ரவுலிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘லெகசி ஆப் லைஸ்’ விறுவிறுப்பு குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!