தல தளபதி ரசிகர்களை ஒரே பதிலில் வாயடைய செய்த நடிகை..!!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். சமூக வளைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் உடையாடுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கலந்துரையாடினார்

அப்போது, பொதுவாக திரைப்பிரபலங்களிடம் கேட்கப்படும் அந்த கேள்வியை ரசிகர்கள் முன்வைத்தனர். அதில் ரசிகர்களின் சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார் மஞ்சிமா. ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மஞ்சிமா மோகனின் பதில்களும் பின் வருமாறு,

கேள்வி : நீங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது உங்களை கடுப்பாக்கும் ஒரு கேள்வி என்ன?

பதில் : தல, தளபதி – இருவரில் யார் சிறந்தவர் என்பதை கூறமுடியாது. அது மிகவும் கடினமான கேள்வி.

கேள்வி : 2017-ல் உங்களுக்கு பிடித்த தமிழ்ப்படங்கள் என்னென்ன..?

பதில் : விக்ரம் வேதா, பாகுபலி 2, மாநகரம், மெர்சல்

கேள்வி : மீம்ஸ் கிரியேட்டர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

பதில் : அவர்கள் அறிவாளிகள், ஸ்மார்ட், கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என நினைக்கிறேன்

கேள்வி : நெகட்டிவிட்டியை எப்படி கையாள்கிறீர்கள்..?

பதில் : அவர்களை கண்டுகொள்ள வேண்டாம். Ignore them என்று கூறியுள்ளார் மஞ்சிமா.

கேள்வி :காலை எழுந்ததும் நீங்கள் முதலில் தேடும் விஷயம்.?

பதில் : என்னுடைய மொபைல்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!