சைக்கிளிங் செல்வதில் அஜித்தின் அடுத்த பிளானே இதுதானாம்- நண்பர்களிடம் அவரே கூறிய தகவல்,

அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருபவர். கார், பைக் ரேஸ், போட்டோ கிராபி, சமையல், ஏரோநாடிக், துப்பாக்கி சுடுதல் இப்போது சைக்கிளிங்.

அடுத்தடுத்து ஏதாவது புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறார். அண்மையில் அவர் சைக்கிளில் 3000 கிலோ மீட்டர் மேல் பயணம் செய்த விஷயம் எல்லாம் பார்த்தோம்.

தென்னிந்திய எல்லைகளை தாண்டி அண்மையில் கொல்கத்தா வரை சென்று சென்னை திரும்பினார்.

அடுத்தகட்டமாக சைக்கிளிலேயே இந்திய எல்லைகளைக்கடந்து, சர்வதேச ட்ரிப்பாக மியான்மர் வரை சென்று திரும்ப திட்டமிட்டிருக்கிறாராம் அஜித்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!