டுவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ்…. சிம்புவுக்கு பதிலடியா?

நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில் ‘நடிகர்’ என இருந்ததை ‘அசுரன்/நடிகர்’ என மாற்றியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தின் பயோவில் ‘நடிகர்’ என இருந்ததை ‘அசுரன்/நடிகர்’ என மாற்றியுள்ளார். இது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தில் “நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்….ஈஸ்வரன்டா’ என்ற வசனத்தை சிம்பு பேசியிருப்பார். தனுஷின் அசுரன் படத்தைக் குறிப்பிட்டுத்தான் சிம்பு இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்பட்டது.

தற்போது சிம்பு பேசிய வசனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் தனுஷ் ‘அசுரன்/நடிகர்’ மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!