அஜித்தின் வலிமை பட தெலுங்கு டப்பிங் இத்தனை கோடிக்கு விலைபோனதா?

அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை கொஞ்சம் கூட இடைவேளை இல்லாமல் நடத்துகின்றனர்.

படத்தின் அப்டேட் வரும் நியூஇயர் ஸ்பெஷலாக வரும் என செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இப்போது என்ன தகவல் என்றால் படத்தின் தெலுங்கு டப்பிங்கை வாங்க பெரிய போட்டி நடந்து வருகின்றனவாம். ரூ. 10 கோடிக்கு தெலுங்கு டப்பிங் உரிமையை கேட்கப்படுவதாக கூறுகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமம் அதிக தொகைக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!