மீண்டும் சூர்யாவை கவர்ந்த இயக்குனர் சுதா கொங்கராவின் கதை, இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு..

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

இப்படம் பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு, இதுவரை OTT யில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற படமாக உள்ளது.

மேலும் அடுத்தாக நடிகர் சூர்யா இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்கரா மற்றும் சில இயக்குனர் சேர்ந்து இயக்கியுள்ள Anthology திரைப்படம் தான் பாவ கதைகள், இப்படம் பிரபல ஒ.டி.டி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

இதனிடையே தற்போது சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பாவ கதைகள் படத்தில் தங்கம் என்ற பகுதியை இயக்கியுள்ள சுதா கொங்கராவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!