அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம், முதலிடம் பிடித்த மாஸ்டர்..! இரண்டாவது இடம் கூட பிடிக்காத வலிமை..?

ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு நடந்த சில முக்கிய சம்பவங்கள் குறித்து பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது #ThisHappened2020 என்ற ஹாஷ் டாக்கில் சில பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2020-ல் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் மாஸ்டர் திரைப்படம் NO.1 இடத்தை பிடித்துள்ளது.

மேலும் அதன்பின் வலிமை திரைப்படம் மூன்றாவது இடத்திலும், சூரரை போற்று, தர்பார் 5 மற்றும் 10 இடத்தை பிடித்துள்ளன.

தற்போது இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். மேலும் வலிமை திரைப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் கடந்த வருடம் வெளியாகவில்லை, ஆனாலும் மூன்றாவது பிடித்துள்ளது அஜித் ரசிகர்களின் பலத்தை காண்பிக்கிறது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!