விஜய்யிடம் சூப்பர் ஹீரோ கதையை கூறியிருக்கும் பிரபல இயக்குனர்- இதுமட்டும் நடந்தால்?

இளைய தளபதி விஜய் நடிப்பில் மாஸாக தயாராகி இருக்கிறது மாஸ்டர் திரைப்படம். இப்படம் வரும் ஜனவரி 2021ல் வெளியாகும் என்ற நம்பிக்கை படக்குழு கொடுத்துள்ளார்கள்.

ஜனவரி 13 என்பது தான் தேதி ஆனால் எப்போது படம் வெளியாகுமோ என்பது தெரியாது. அடுத்தபடியாக விஜய்யுடன் இணையும் இயக்குனர் குறித்து நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இறுதியாக நெல்சன் தான் உறுதியானார் என்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித், தளபதி விஜய்யை சந்தித்து சூப்பர் ஹீரோ கதையை சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களது கூட்டணி மட்டும் அமைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!