தளபதி விஜய் மற்றும் மாஸ்டர் டீசர் குறித்து யுடியூப் நிறுவனம் பதிவு, என்ன கூறியுள்ளனர் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருவதால், தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இவரின் அடுத்த திரைப்படம் குறித்த கேள்வி தற்போதே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியான பின்னரே தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது, அதுமட்டுமின்றி பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மேலும் தற்போது யூடியூப் நிறுவனமே ட்விட்டரில் மாஸ்டர் திரைப்படம் குறித்து ரசிகர்களின் பதிவிற்கு கமெண்ட் செய்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!