தளபதி 65 அப்டேட் – விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை?

நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் உள்ளனர்.

இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், படத்தின் ஹீரோயின் மற்றும் வில்லனை பாலிவுட்டில் இருந்து அழைத்து வர திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடமும், வில்லனாக நடிக்க ஜான் ஆபிரஹாமிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!