மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் இது தான்? இணையத்தில் கசிந்த கதை !

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

நீண்ட நாளாக வெளியாகாமல் இருந்த இப்படம் தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால்,

அடுத்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என நேற்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி உடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மாஸ்டரில் தளபதி விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ், இந்த படத்தில் ஒரு குடிகார புரபொசராகவும், கண் பார்வை பாதித்த கேரக்டரிலும் நடிக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!