எனக்கு தளபதி விஜய் படங்களில் பிடித்தது இவை தான்.. ஆர்.ஜெ. பாலாஜி பேட்டி

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி. இதற்கு முன் இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒன்றாக அமைந்திருந்தது.

இப்படத்திற்கு பிறகு ஹீரோவாக எல்.கே.ஜி படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் இவருக்கு பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை தொடந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.

சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசினார் ஆர்.ஜெ. பாலாஜி. அப்போது தளபதி விஜயை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆர்.ஜெ. பாலாஜி ” எனக்கு விஜய்யின் நடனம் மிகவும் பிடிக்கும், அவர் நடித்த படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி, துப்பாக்கி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் பிடிக்கும் ” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!