விஜய்யின் மாஸ்டர் பட டிரைலர் எப்போது?- லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய்யின் மாஸ்டர் படம் அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப் போகும் பெரிய நடிகரின் படம்.

எப்போதோ படம் தயாராகிவிட்டாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, காரணம் கொரோனா. இதுநாள் திரையரங்கை திறப்பார்களா என்று கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

50% கூட்டத்துடன் படம் ஒளிபரப்பு செய்யலாம் என்று கூறியுள்ளனர். விரைவில் புதிய புதிய படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டியில் இப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, மாஸ்டர் படம் குறித்து அப்டேட் என்னிடம் பலர் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

டிரைலர், டீஸர் கட் செய்வது அதை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதற்காக தான். அதை கிரியேட் செய்து ரசிகர்களுக்கு காட்டாமல் இருப்பது எங்களுக்கும் கஷ்டம் தான்.

இப்போது தான் திரையரங்குகள் திறப்பது குறித்து நல்ல விஷயம் நடந்துள்ளது.

ரிலீஸ் உறுதிசெய்யப்பட்ட அடுத்த நாளே டிரைலர் என அடுத்தடுத்த மாஸ்டர் அப்டேட் வரும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!