இந்தியன் 2 ஷங்கரின் அதிரடி முடிவு- படம் டிராப்பா? இல்லையா?

கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் இருந்தே படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இடையில் படம் தயாரிப்பு வேறொரு நிறுவனத்திடம் மாறியது, படப்பிடிப்பும் நடந்தது. பின் இடையில் படம் டிராப் எனப்பட்டது, அதற்குள் கொரோனா வந்து எல்லாவற்றையும் நிறுத்தி வைத்தது.

தற்போது ஷங்கர் இந்தியன் 2 படத்தை டிராப் செய்துவிட்டு வேறொரு படம் இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் என்றனர்.

ஆனால் நமக்கு கிடைத்த உண்மை தகவல் என்னவென்றால் படம் டிராப் ஆகவில்லை என்றும் வரும் ஜனவரி 2021ல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!