விஜய்யின் அடுத்த பட இயக்குனர் பற்றி வந்த தகவலின் உண்மை இதுதான்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் என்று உறுதியாக தெரியவில்லை.

இப்போது வரை படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகிவிடும் என்கின்றனர்.

இந்த நேரத்தில் தான் விஜய்யின் 65வது பட இயக்குனர் குறித்த தகவல்கள் அதிகம் வந்தன. அவர் முருகதாஸுடன் இணைய இருந்த நிலையில் சில பிரச்சனைகளால் அவர் வெளியேறினார்.

அடுத்தபடியாக விஜய்யின் புதிய படத்தை இயக்குபவர் பேரரசு என்றனர். ஆனால் அதுவும் வதந்தி என்று கூறப்படுகிறது.

தளபதி சில முக்கிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் ஒருவரை தேர்வு செய்வார் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!