தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனரை தொடர்ந்து தயாரிப்பாளரும் மாற்றமா! வெளியான அதிர்ச்சி தகவல்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் சாதனை படைத்தது வருகிறது.

கடைசியாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்த நிலையில், அவர் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

மேலும் தற்போது தளபதி 65 திரைப்படத்தை இயக்குனர் பேரரசு இயங்குவதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தளபதி 66 திரைப்படத்தை தான் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!