பல முறை தற்கொலைக்கு முயன்றேன்.. பிரபல இசையமைப்பாளரின் கண்ணீர் பக்கம்..!!


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்டுள்ளார். இசையுலகில் தனியிடம் பிடித்துள்ள அவரின் இளமைக்காலம் மிகவும் வறுமையும் துயரமும் நிறைந்தாக இருந்துள்ளது. பல நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விரக்தியோடு வாழ்ந்துள்ளார்.

கிருஷ்ணா த்ரிலோக் என்கிற எழுத்தாளர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ரஹ்மான் சொல்ல சொல்ல ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் “ஒரு கனவின் குறிப்புக்கள்” . அதில் தான் இளமையில் வாழ்வில் பட்ட சிரமங்களைப் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

“இளவயதிலேயே என் அப்பா இறந்து போனார். அந்த வெற்றிடத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது 25 வயது வரை தினமும், நான் எதையும் சாதிக்க இயலாதவன் எனவே தற்கொலை செய்து செத்துவிட வேண்டும் என்று நினைக்காத நாட்களில்லை.

“நாங்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டோம். என் அப்பாவின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வாழ்ந்து வந்தோம். வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட விரக்தியான அந்த தருணங்களே என்னை பயமற்றவனாகவும் ஆக்கியது.” சமீபத்தில் வெளிவந்த எந்திரன் 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் 41 வயதிலேயே ரிட்டையர்ட் ஆக விரும்பியதாக வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!