பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறிய குரங்கு பொம்மை நடிகை

பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’ படத்தில் நடித்த நடிகை டெல்னா டேவிஸ் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறியிருக்கிறார்.

அன்பே வா என்னும் புதிய மெகாத் தொடர் உருவாகி வருகிறது. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக விராட் நடிக்கிறார். மேலும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லாபோஸ், துரை ஆகியோர் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து, உருவாகி வரும் இந்த தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, விஜயலட்சுமி தயாரிக்கிறார். பிரின்ஸ் இமானுவேல் இயக்கி வருகிறார். தரண் குமார் இசையமைத்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!