சூரரை போற்று திரைப்படத்தின் ட்ரைலர் குறித்து வெளியான புதிய அப்டேட், உற்சாகத்தில் ரசிகர்கள்..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார், கடைசியாக இவர் நடிப்பில் காப்பான் திரைப்படம் வெளியாகி எதிர்ப்பார்த்த வெற்றியை பெற தவறியது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படமும் வரும் அக்டோபர் 30ஆம் தேதி பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதால், ட்ரைலர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம் சூரரை போற்று திரைப்படத்தின் ட்ரைலர் 1 நிமிடம் 52 வினாடிகள் வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த ட்ரைலர் U சான்றிதழையும் பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!