ரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்? கதை ரெடி..

இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல், உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இவர் திரையுலகிற்கு வந்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை பல 100 கோடி மற்றும் 200 கோடி வசூல் செய்து படங்களையும் கொடுத்த நடிகர்களில் முன்னனிலையில் இருப்பவரும் ரஜினி தான்.

சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பவரிடம் ரஜினி எனக்காக ஒரு கதை தயார் செய்துவிட்டு வாருங்கள் என கூறியிருந்தார்.

அதனால் தற்போது ரஜினிக்காக மிகவும் அருமையாக கதை ஒன்றை தயார் செய்துவிட்டாராம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இன்னும் ஓரிரு நாட்களில் ரஜினியின் நேரில் சந்தித்து கதையை கூறவிருக்கிறாராம்.

ரஜினி தயார் செய்யச்சொன்ன கதை என்பதால் கண்டிப்பாக தேசிங்கு பெரியசாமியின் கதையை ஓகே செய்ய பல வாய்ப்புகள் இருப்பதாகவும் ” தலைவர் 169 ” படத்தை அவரே இயக்குவார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!