நீண்ட நாள் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்- எந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தெரியுமா?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர், இவருக்கு தமிழகமெங்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

கடைசியாக இவர் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது, அடுத்ததாக இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் இவர் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வந்தார், கொரோனா காரணமாக ஷூட்டிங் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே திரைப்படத்தின் ஷூட்டிங் பணியில் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் 10 நாட்கள் வரை நடைபெறவுள்ளதாகவும், மேலும் அது பாடல் காட்சி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!