தல அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பி – நிகழ்த்திய சாதனைகள் பல

உடல்நல குறைவு காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார் பாடும் நிலா எஸ்.பி.பி. இவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது.

தாமாரைப்பாக்கத்தில் நடைபெற்று வந்த எஸ்.பி.பியின் இறுதி சடங்கு முடிந்து, 72 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு எஸ்.பி.பியை அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்துள்ளன.

இந்திய திரையுலகில் அவர் செய்த பல விஷயங்கள் நமக்கு தெரியாது, அதனை ரசிகர்களின் பார்வைக்காக எஸ்.பி.பியின் Unknow Facts என இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம்.

இதோ…

1. இன்று தமிழ் திரையுலகில் தல என ரசிகர்கள் கொண்டாடும், நடிகர் அஜித்தை முதன் முதலில் ‘Prema Pusthakam’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

2. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களின் முதல் துவக்க பாடலை பாடி திரையரங்கை அதிர வைத்தவர் பாடகர் எஸ்.பி.பி.

3. அதுமட்டுமல்ல எஸ்.பி.பி துவக்க பாடலை பாடினால் அந்த படம் ஹிட் எனும் ஒரு செண்டிமெண்ட் உண்டு

4. ஒரே நாளில் கன்னடத்தில் 21 பாடல்களும், தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களும், தெலுங்கில் ஒரு நாளில் 16 பாடல்களும் பாடி மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

5. ரஜினிகாந்த், கமல், சல்மான் கான், அர்ஜுன், ஜெமினி கனேசன், அணில் கபூர் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசுபவர் எஸ்.பி.பி.

6. எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என மூன்று தலைமுறைக்கு பாடல்கள் பாடிய பெரும் எஸ்.பி.பியை சேரும்.

7. பாடல்கள் படுவது மட்டுமல்லாமல் 46 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி சுமார் 72 படங்களில் நடித்துள்ளார் எஸ்.பி.பி.

8. ஹிந்தியில் கமல் நடிப்பில் வெளியாந ‘ Ek Duje Ke Liye’ படத்தில் ‘tere mere beech mein’ என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றார் நம் எஸ்.பி.பி.

9. இதுவரை 40,000 பாடல்கள் பாடி சாதனை படைத்தது, 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார் மகா பாடகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் இம்மண்ணை விட்டு சென்றலும், நம் மனதை விட்டு நீங்கா இடத்தை தனது பாடல்களின் மூலம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது பாடல்களால், நம் வாழ்க்கையில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் நம் உயிர் பாடகர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!