ஹீரோவாக களமிறங்கும் கௌதம் மேனன் – மாஸ்டர் நடிகருடன் மாஸ் கூட்டணி

தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கௌதம் மேனன். இவருடைய இயக்கத்தில் விரைவில் ஜோஷ்வா இமை போல் காக்க எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தை ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்த வெப் சீரிஸின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனர் கௌதம் மேனன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் கௌதம் மேனன் இயக்கும் மற்றொரு வெப் சீரிஸில் கதாநாயகனாக கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!