தளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் – முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி

தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரவிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை வெளிவராமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

அதே போல் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளிவரவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வரும் பொங்கல் 2021ஆம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் எந்தெந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார் என்று லிஸ்ட் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

1. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் = தளபதி 65

2. வெற்றிமாறன் இயக்கத்தில் = தளபதி 66

3. தென்னாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் – பாண்டிராஜ் இயக்கத்தில் = தளபதி 67

3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் = தளபதி 68

இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!