ஏனோ தானோ என்று நீ அதை செய்யக் கூடாது- இளம் நடிகருக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்

மக்களில் விஜய்யின் தீவிர ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். பிரபலங்களிலும் இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு.

எப்போதும் தன்னை தளபதி ரசிகராக பெருமையாக கூறிக் கொள்வார், அவருக்கு தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் சாந்தனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

அண்மையில் ஒரு பேட்டி விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் நீங்கள் நாயகனாக நடித்து வருகிறீர்கள், உங்களுக்கான அங்கீகாரம் உருவாகி வருகிறது.

என்னுடைய படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உங்களை தேடிவரும், அப்போது அதில் நீங்கள் நடிக்க வேண்டும்.

ஏதோ படத்தில் இருக்கோம் என்பது போல் கதாபாத்திரம் வந்தால் அதில் நீங்கள் நடிக்க வேண்டாம் என தளபதி கூறியிருப்பதாக சாந்தனு கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!