ஆரவ் திருமணம் – கடுப்பான நடிகை ஓவியா, என்ன சொன்னார் தெரியுமா!

பிக் பாஸ் மூலமாக தமிழ் திரையுலகில் ஒரு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆரவ். பிக் பாஸ் முதலாம் சீசனில் டைட்டிலை தட்டி சென்று பல பட வாய்ப்புகளை பெற்றார் ஆரவ்.

ஆம் மார்க்கெட் ராஜா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதுமட்டுமல்லாமல் தற்போது ராஜா பீமா, மீண்டும் வா அருகில் வா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் இளம் நடிகை ராஹி என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆரவ் மற்றும் ராஹியின் திருமண புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது.

இவரின் திருமணத்திற்கு முதலாம் பிக் சீசனில் இருந்து ஆர்த்தி, பிந்து மாதவி, சுஜா வாருணி, சினேகன், உளியிட்டோர் வந்து சிறப்பித்தனர். ஆனால் நடிகை ஓவியா மட்டும் இவரின் திருமணத்தில் வந்து பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இதற்க்கு காரணம் என்னவென்று சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் நடிகை ஓவியவிடம் கேட்டுள்ளார். அதற்க்கு பதிலளித்த ஓவியா ” உலகம் ஒரு ஆபத்தான இடமாகும், இது தீமை செய்பவர்களால் அல்ல, அது ஒன்றும் செய்யாதவர்களால் தான் ” என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!