மாஸ்டர் பட ரிலீஸில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்- ரசிகர்கள் அதிர்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்திற்கான படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என பல இடங்களில் நடத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2020ல் படம் வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் இல்லை. கடந்த சில மாதங்களாக ஜனவரி 2021ல் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாகும் என்றனர்.

அதோடு இப்படம் கண்டிப்பாக திரையரங்கில் மட்டும் தான் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது படத்தை OTTயில் வெளியிட படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த செய்தி வைரலாக பரவ படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!