பிக்பாஸில் நான் இல்லை, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த பிரபலம்- வருத்தத்தில் ரசிகர்கள்

தமழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தான். தெலுங்கில் 4வது சீசன் தொடங்கிவிட்டது, மிகப் பெரிய ஓபனிங் நிகழ்ச்சிக்கு இருந்துள்ளது.

தமிழில் 4வது சீசனுக்கான புரொமோ ஏற்கெனவே வெளியாகிவிட்டது. ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்பது தான் இப்போது வரை தெளிவாக தெரியவில்லை.

ரசிகர்களும் தேதிக்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் டிக்டாக் புகழ் இலக்கியா பங்குபெறுகிறார் என செய்திகள் வந்தன.

ஆனால் அவர் தான் கலந்துகொள்வதாக வரும் செய்திகள் வதந்தி என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் கலந்துகொள்கிறார் என பெரிதும் எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!