விஜய்யின் மாஸ்டர் படமும் இப்படி தான் வசூல் செய்யும்- பிரபல தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் சினிமாவில் மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியவர்.

மாநகரம் படத்தின் வேலையை பார்த்து வியந்துபோய் தான் விஜய் தன்னுடைய புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்துள்ளார். படத்தின் வேலைகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் விஜய்யும் படத்தை முழுவதுமாக பார்க்கவும் இருக்கிறார் என்கின்றனர். திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் பிரபலங்கள் வருத்தத்தில் உள்ளனர்.

வெளிநாட்டில் லாக் டவுன் முடிந்து Tenet என்ற திரைப்படம் மிகப் பெரிய வசூல் செய்துள்ளது.

இதனை பார்த்த தயாரிப்பாளர் தனஞ்செயன், இது பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது, விஜய்யின் மாஸ்டர் படமும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனால் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை செய்யும் என டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!