அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உறுதியானது- நடிப்பவர்கள் யார் தெரியுமா?

மலையாளத்தில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ஒரு படம் அய்யப்பனும் கோஷியும். பிஜு மேனன் மற்றும் ப்ருத்விராஜ் நடித்துள்ள இப்படம் ரூ. 5 கோடி செலவில் தயாரானது, வசூல் என்று பார்த்தால் ரூ. 52 கோடியை எட்டியுள்ளது.

லாக்டவுன் முன்பு இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல நடிகர்களின் பெயர் அடிபட்டன.

சரத்குமார், சசிகுமார், சிம்பு என தொடர்ந்து பல நடிகர்களின் பெயர்கள் இடம் பெற்றன.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் சசி, கார்த்தி மற்றும் பார்த்திபன் இந்த வேடங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தார்.

இப்போது இதே கூட்டணி தான் உறுதியாகியுள்ளதாம். கார்த்தி மற்றும் பார்த்திபன் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!