ரூ 5 கோடியை நன்கொடையாக கொடுத்த சூர்யா, பெரும் வரவேற்பு

சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.

கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

அதோடு கொரொனா காலத்தில் மக்கள் பணியாற்றியவர்களுக்கு விற்ற தொகையிலிருந்து ரூ 5 கோடியை நன்கொடையாக கொடுப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!