அஜித் மீதான காதலால் கோடி கணக்கில் செலவு செய்த பிரபல நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


நடிகர் அஜித்தை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதேபோல் அவர் நேசிக்கும் சினிமா துறையில் உள்ளவர்களில் பலர் அவரது தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது அஜித் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகிறது.


இந்நிலையில் சினிமா துறையில் உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், அஜித்தின் மிகத் தீவிர ரசிகர். அஜித்துக்காக இவர் ரூ.6 கோடியை செலவழித்துள்ளார். இவர் ‘பில்லா பாண்டி’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். அஜித் மீதான காதலை வெளிப்படுத்தவே ரூ. 6 கோடி செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளதாக ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்