இயக்குனருக்கு பதிலடி கொடுத்த தல..!! நம்பவே முடியலையே..!!


தம்பி நடிகரை வைத்து காட்டு மிருகத்தின் பெயரில் படம் எடுத்த இயக்குனருக்கும் ஹெட் நடிகருக்கும் அவ்வளவு ஒற்றுமை. அந்த ஒற்றுமை நான்காவது முறையாக கூட்டணி அமைத்து படம் எடுக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த கூட்டணியின் மூன்றாவது படம் செம்ம அடி வாங்கியது.

ஆனாலும், அந்த இயக்குனரை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை ஹெட் நடிகர். நான்காவதாக தன்னை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். மேலும், படம் எடுக்குற வேலையை மட்டும் பாருங்க, படத்தில் அதை பண்ணியிருக்கோம், இதை பண்ணியிருக்கோம், அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம், இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்-னு எந்த தகவலையும் சொல்லாதிங்க.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

படம் எடுக்குறது மட்டும் தான் நம்ம வேலை. நம் படத்தை பற்றி நாமே பெருமையாக கூறிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. பாராட்டுக்களோ, விமர்சனங்களோ அதை படம் பார்ப்பவர்கள் சொல்லட்டும். படம் வெளியாகும் வரை படக்குழுவில் இருந்து யாரும் எந்த செய்தியையும் வெளியே சொல்லகூடாது. அது உங்கள் பொறுப்பு என சற்று கெடுபடியாகவே இயக்குனரிடம் கூறியுள்ளாராம் ஹெட் நடிகர்.

இதனால், படம் வெளியாகும் வரை படம் குறித்த தகவல்கள் வெளியே செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம் இயக்குனர். முந்தைய படத்தின் போது, ஊரில் உள்ள அனைத்து ஊடகங்கள், விமர்சகர்கள் என அனைவரிடம் படம் குறித்த தகவலை படம் வெளியாகும் முன்பே பகிர்ந்துகொண்டார் அந்த இயக்குனர் என்பது குறிப்பிடதக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!