புதிய கெட்-அப் குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, புதிய கெட்-அப்பில் இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. புதிய படத்தின் கெட்-அப்பாக இருக்கும் என்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது, ”லாக்டவுனா இருக்குறதுனால டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன் சார். அதான். மூஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே.

பூமியோட குணம் ஒன்னு இருக்கு சார். ஒரு புல் தரை இருக்கு. அதுல நடந்துட்டே இருந்தா பாதை வந்துடும். நடக்கமா விட்டிங்கனா திரும்ப புல் மொளச்சுடும். recover ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கு இருக்கு என நான் நம்புறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!