துப்பாக்கி படத்தின் சக்சஸ் பார்ட்டியில் தளபதி விஜய் செய்த விஷயம், அப்படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வால் கூறிய தகவல்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.

பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.

இப்படம் வெளியாகி தளபதி விஜய்க்கு முதல் நூறு கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.

மேலும் தற்போது அப்படத்தில் வில்லனாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த நடிகர் வித்யுத் ஜம்வால், அப்படத்தில் நடித்தது குறித்தும் சில சுவாரஸ்ய தகவல்களையும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “நடிகர் விஜய் சிறந்த மனிதர், மிகவும் பிட்டான நடிகர்களில் இவரும் ஒருவர், அவருக்கு ஆக்ஷன் என்றால் பிடிக்கும்.

துப்பாக்கி திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று, ஏன்னென்றால் நான் விரும்பிய அனைத்தும் கிடைத்தது. துப்பாக்கி படம் தென்னிந்தியா மட்டுமின்றி பல இடங்களில் பிரபலமாக விளங்கியது.

மேலும் அப்படத்தின் சக்சஸ் பார்ட்டிகாக தளபதி விஜய் வீட்டிற்கு சென்றதும், அவர் என்னை கட்டிப்பிடித்து ‘உன்னை கண்டால் பெருமையாக உள்ளது’ என்றார்” என வித்யுத் ஜம்வால் பேட்டியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!