தமிழ் சினிமாவின் வேறு எந்த நடிகரும் செய்யாத வசூல் சாதனை, அஜித் தான் நம்பர் 1, இரண்டு ரஜினி, மூன்று விஜய்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வசூலை பொறுத்து தான் ஒரு நடிகரின் மார்க்கெட் முடிவு செய்யப்படுகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் ஒரே வருடத்தில் அதிகம் வசூல் கொடுத்த நடிகர்கள் என்று பார்த்தால் அஜித் தான் முதலிடத்தில் உள்ளார்.

அவரின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் ஒரே வருடத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 220 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்த் ஒரே வருடத்தில் காலா, 2.0 படத்தின் மூலம் ரூ 180 கோடி வசூல் கொடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

விஜய் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் கொடுத்து பல வருடமாகிவிட்டது, கடைசியாக ஜில்லா, கத்தி மூலம் ரூ 110 கோடி கொடுத்துள்ளார், ஆனால் இவரின் பிகில் ரூ 147 கோடி வசூல் செய்ததே இவரின் ஆல் டைம் பெஸ்ட்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!